பெருங்கொடையான் பேணான் வெகுளி – குறள்: 526

Thiruvalluvar

பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குஉடையார் மாநிலத்து இல்.
– குறள்: 526

– அதிகாரம்: சுற்றம் தழால், பால்: பொருள்கலைஞர் உரை

பெரிய கொடையுள்ளம் கொண்டவனாகவும், வெகுண்டு எழும் சீற்றத்தை விலக்கியவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப் போல் சுற்றம் சூழ இருப்போர் உலகில் யாரும் இல்லை எனலாம்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒருவன் பெருங்கொடையாளியும் சினத்தை வெறுப்பவனுமாயிருப்பின் ; அவன் போலச் சுற்றத்தையுடையார் இவ்வுலகத்தில் இல்லை.மு. வரதராசனார் உரை

பெரிய கொடையாளியாகவும் சினமற்றவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப்போல் சுற்றத்தாரை உடையவர் உலகத்தில் யாரும் இல்லை.G.U. Pope’s Translation

Than one who gifts bestows and wrath restrains, Through the wide world none larger following gains.

 – Thirukkural: 526, Cherishing one’s kindred, WealthBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.