நலத்தின்கண் நார்இன்மை தோன்றின் – குறள்: 958

Thiruvalluvar

நலத்தின்கண் நார்இன்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்.
குறள்: 958

– அதிகாரம்: குடிமை, பால்: பொருள்.



கலைஞர் உரை

என்னதான் அழகும் புகழும் உடையவனாக இருந்தாலும் அன்பு எனும் ஒரு பண்பு இல்லாதவனாக இருந்தால் அவன் பிறந்த குலத்தையே சந்தேகிக்க வேண்டிய நிலை ஏற்படும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

குடிச் சிறப்புடையவனாய்ப் பிறந்தவனிடத்தில் அன்பின்மை காணப்படின்; உலகம் அவனை அக்குடிப் பிறப்புப் பற்றி ஐயுறவு கொள்ளும்.



மு. வரதராசனார் உரை

ஒருவனுடைய நல்ல பண்புகளுக்கிடையில் அன்பற்ற தன்மை காணப்பட்டால், அவனை அவனுடைய குடிப்பிறப்புப் பற்றி ஐயப்பட நேரும்.



G.U. Pope’s Translation

If lack of love appear in those who bear some goodly name,
‘Twill make men doubt the ancestry they claim.

Thirukkural: 958, Nobility, Wealth.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.