குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் – குறள்: 957

Thiruvalluvar

குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து.
குறள்: 957

– அதிகாரம்: குடிமை, பால்: பொருள்.கலைஞர் உரை

பிறந்த குடிக்குப் பெருமை சேர்ப்பவரிடமுள்ள சிறிய குறைகள், ஒளிவு மறைவு ஏதுமின்றி, வானத்து நிலவில் உள்ள குறைபோல
வெளிப்படையாகத் தெரியக் கூடியதாகும்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

உயர்குடிப் பிறந்தவரிடத்திலுள்ள குற்றம்; வானத்தின்கண் வெண்ணிலாவிலுள்ள களங்கம்போல் எல்லார்க்குந் தெரியுமாறு உயர்ந்து விளங்கித் தோன்றும்.மு. வரதராசனார் உரை

உயர்குடியில் பிறந்தவரிடத்தில் உண்டாகும் குற்றம், ஆகாயத்தில் திங்களிடம் காணப்படும் களங்கம்போல் பலரறியத் தோன்றும்.G.U. Pope’s Translation

The faults of men of noble race are seen by every eye, As spots on her bright orb that walks sublime the evening sky.

Thirukkural: 957, Nobility, Wealth.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.