அன்புஅகத்து இல்லா உயிர்வாழ்க்கை – குறள்: 78

அன்புஅகத்து இல்லா உயிர்வாழ்க்கை

அன்புஅகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரம்தளிர்த்து அற்று. குறள்: 78

– அதிகாரம்: அன்புடைமை, பால்: அறம்



கலைஞர் உரை

மனத்தில் அன்பு இல்லாதவருடைய வாழ்க்கை, பாலை வானத்தில்
பட்டமரம் தளிர்த்தது போன்றது.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

உள்ளத்தில் அன்பில்லாத வுயிர் இல்லற வாழ்க்கை நடாத்துதல்,பாலை நிலத்தின் கண் பட்டுப்போன மரம் தளிர்த்தாற் போலும்.



மு. வரதராசனார் உரை

அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர்வாழ்க்கை வளமற்ற பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது.



G.U. Pope’s Translation

The loveless soul, the very joys of life may know,
When flowers, in barren soil, on sapless trees, shall blow.

 – Thirukkural: 78, The Possession of Love, Virtues



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.