நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் – குறள்: 959

Thiruvalluvar

நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.
குறள்: 959

– அதிகாரம்: குடிமை, பால்: பொருள்.கலைஞர் உரை

விளைந்த பயிரைப் பார்த்தாலே இது எந்த நிலத்தில் விளைந்தது
என்று அறிந்து கொள்ளலாம். அதேபோல ஒருவரின் வாய்ச் சொல்லைக் கேட்டே அவர் எத்தகைய குடியில் பிறந்தவர் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

நிலத்தின் இயல்பை அதில் முளைத்த விதையின் முளை தெரிவிக்கும்; அதுபோல குலத்தின் இயல்பை அதிற் பிறந்தவர் உரைக்குஞ் சொல் தெரிவிக்கும்.மு. வரதராசனார் உரை

இன்ன நிலத்தில் இருந்து முளைத்தது என்பதை முளை காட்டும்; அதுபோல் குடியிற் பிறந்தவரின் வாய்ச்சொல் அவருடைய குடிப்பிறப்பைக் காட்டும்.G.U. Pope’s Translation

Of soil the plants that spring thereout will show the worth;
The words they speak declare the men of noble birth.

Thirukkural: 959, Nobility, Wealth.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.