இறைகாக்கும் வையகம் எல்லாம் – குறள்: 547

Thiruvalluvar

இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்.
– குறள்: 547

– அதிகாரம்: செங்கோன்மை, பால்: பொருள்கலைஞர் உரை

நீதி வழுவாமல் ஓர் அரசு நடைபெற்றால் அந்த அரசை அந்த நீதியே
காப்பாற்றும்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

உலகம் முழுவதையும் அரசன் காப்பான் ;முட்டுப்பாடு நேர்ந்த விடத்தும் முட்டில்லாது ஆட்சி செய்வானாயின், அவனை அவன் செங்கோலே காக்கும்.மு. வரதராசனார் உரை

உலகத்தை எல்லாம் அரசன் காப்பாற்றுவான்; நீதிமுறை கெடாதவாறு ஆட்சி செய்வானாயின் அரசனை அந்த முறையே காப்பாற்றும்.G.U. Pope’s Translation

The king all the whole realm of earth protects;
And justice guards the king who right respects.

 – Thirukkural: 547, The Right Sceptre, WealthBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.