எண்பதத்தான் ஓரா முறைசெய்ய – குறள்: 548

Thiruvalluvar

எண்பதத்தான் ஓரா முறைசெய்ய மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்.
– குறள்: 548

– அதிகாரம்: செங்கோன்மை, பால்: பொருள்



கலைஞர் உரை

ஆடம்பரமாகவும், ஆராய்ந்து நீதி வழங்காமலும் நடைபெறுகிற அரசு தாழ்ந்த நிலையடைந்து தானாகவே கெட்டொழிந்து விடும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

முறை ( நியாயம் ) வேண்டினவர்க்குக் காட்சிக் கெளியனாயிருந்து , அவர் சொல்லியவற்றை அறநூலறிஞருடன் ஆராய்ந்து , உண்மைக் கேற்பத் தீர்ப்புச் செய்யாத அரசன் ; தாழ்ந்த நிலையில் நின்று தானே கெடுவான்.



மு. வரதராசனார் உரை

எளிய செல்வி உடையவனாய் ஆராய்ந்து நீதிமுறை செய்யாத அரசன் தாழ்ந்த நிலையில் நின்று ( பகைவரில்லாமலும்) தானே கெடுவான்.



G.U. Pope’s Translation

Hard of access, nought searching out, with partial hand The king who rules, shall sink and perish from the land.

 – Thirukkural: 548, The Right Sceptre, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.