வேல்அன்று வென்றி தருவது – குறள்: 546

Thiruvalluvar

வேல்அன்று வென்றி தருவது மன்னவன்
கோல்அதூஉம் கோடாது எனின்.
– குறள்: 542

– அதிகாரம்: செங்கோன்மை, பால்: பொருள்கலைஞர் உரை

ஓர் அரசுக்கு வெற்றியைத் தருவது பகைவரை வீழ்த்தும் வேலல்ல;
குடிமக்களை வாழவைக்கும் வளையாத செங்கோல்தான்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

அரசனுக்குப் போரின்கண் வெற்றியைக் கொடுப்பது வேற்படையன்று , அவன் அரசாட்சியே ; அவ்வரசாட்சியும் அங்ஙனஞ் செய்வது அறநெறிதவறாதிருந்த பொழுதே.மு. வரதராசனார் உரை

ஒருவனுக்கு வெற்றி பெற்றுத் தருவது வேல் அன்று; அரசனுடைய செங்கோலே ஆகும்; அச்செங்கோலும் கோணாதிருக்குமாயின்.G.U. Pope’s Translation

Not lance gives kings the victory,
But sceptre swayed with equity.

 – Thirukkural: 546, The Right Sceptre, WealthBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.