இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல். – குறள்: 316
– அதிகாரம்: இன்னா செய்யாமை, பால்: அறம்
விளக்கம்: ஒருவன் துன்பமானவை என்று தன் வாழ்க்கையில் கண்டு உணர்ந்தவைகளை, மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.
இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல். – குறள்: 316
விளக்கம்: ஒருவன் துன்பமானவை என்று தன் வாழ்க்கையில் கண்டு உணர்ந்தவைகளை, மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.
முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்படுபயனும் பார்த்துச் செயல். – குறள்: 676 – அதிகாரம்: வினை செயல்வகை, பால்: பொருள் விளக்கம் ஈடுபடக்கூடிய ஒரு செயலால் எதிர்பார்க்கப்படும் பயன், அதற்கான முயற்சிக்கு இடையே வரும் தடைகள், அச்செயலாற்றுவதற்கான முறை ஆகிய அனைத்தையும் முதலில் ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும்.
மனத்துக்கண் மாசுஇலன் ஆதல் அனைத்துஅறன்ஆகுல நீர பிற. – குறள்: 34 – அதிகாரம்: அறன் வலியுறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை மனம் தூய்மையாக இருப்பதே அறம்; மற்றவை ஆரவாரத்தைத் தவிர வேறொன்றுமில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் தன் மனத்தின்கண் குற்றமற்றவனா யிருத்தலாகிய அவ்வளவே [ மேலும் படிக்க …]
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்பெரும்பயன் இல்லாத சொல். – குறள்: 198 – அதிகாரம்: பயனில சொல்லாமை, பால்: அறம் கலைஞர் உரை அரும்பயன்களை ஆராய்ந்து அறியக்கூடிய ஆற்றல் படைத்தவர்,பெரும்பயன் விளைவிக்காத எந்தச் சொல்லையும் பயன்படுத்த மாட்டார். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அறிதற்கரிய பயன்களை ஆராயவல்ல அறிவுடையார்; [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment