தக்கார் தகவுஇலர் என்பது – குறள்: 114

Thiruvalluvar

தக்கார் தகவுஇலர் என்பது அவர்அவர்
எச்சத்தால் காணப் படும்
.
– குறள்: 114

– அதிகாரம்: நடுவு நிலைமை, பால்: அறம்



கலைஞர் உரை

ஒருவர் நேர்மையானவரா அல்லது நெறி தவறி, நீதி தவறி நடந்தவரா
என்பது அவருக்குப் பின் எஞ்சி நிற்கப் போகும் புகழ்ச் சொல்லைக்
கொண்டோ அல்லது பழிச் சொல்லைக் கொண்டோதான் நிர்ணயிக்கப்படும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

இவர் நேர்மை யுடையவர் அல்லது இல்லாதவர் என்னும் உண்மை; அவரவருடைய மக்களால் அறியப்படும்.



மு. வரதராசனார் உரை

நடுவுநிலைமை உடையவர் நடுவுநிலைமை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சிநிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும்.



G.U. Pope’s Translation

Who just or unjust, lived shall soon appear;
By each one’s offspring shall the truth be clear.

 – Thirukkural: 114, Impartiality, Virtues

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.