அருங்கேடன் என்பது அறிக – குறள்: 210

Thiruvalluvar

அருங்கேடன் என்பது அறிக மருங்குஓடித்
தீவினை செய்யான் எனின்.
– குறள்: 210

– அதிகாரம்: தீவினை அச்சம், பால்: அறம்கலைஞர் உரை

வழிதவறிச் சென்று பிறர்க்குத் தீங்கு விளைவிக்கா தவர்க்கு
எந்தக் கேடும் ஏற்படாது என்பதை அறிந்து கொள்க.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒருவன் செந்நெறியினின்றும் ஒரு பக்கமாக விலகிச் சென்று பிறர்க்குத் தீமை செய்யானாயின்; அவன் கேடில்லாதவன் என்பதை அறிந்து கொள்க.மு. வரதராசனார் உரை

ஒருவன் தவறான நெறியில் சென்று தீய செயல் செய்யாதிருப்பானானால் அவன் கேடு இல்லாதவன் என்று அறியலாம்.G.U. Pope’s Translation

The man, to devious way of sin that never turned aside, From ruin rests secure, whatever ills betide.

 – Thirukkural: 210, Dread of Evil Deed, VirtuesBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.