ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் – குறள்: 214

Thiruvalluvar

ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.
– குறள்: 214

– அதிகாரம்: ஒப்புரவு அறிதல், பால்: அறம்



கலைஞர் உரை

ஒப்புரவை அறிந்து பிறருக்கு உதவியாகத் தன் வாழ்வை அமைத்துக்
கொள்பவனே உயிர்வாழ்பவன் எனக் கருதப்படுவான்; அதற்கு மாறானவன் இறந்தவனே ஆவான்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒப்புரவு செய்வானும்செய்யாதானுமாகிய இருவகைச் செல்வருள், செய்பவனே உயிரோடு கூடி வாழ்பவனாவன்; மற்றச் செய்யாதவன் செத்தாருள் ஒருவனாகக் கருதப்படுவான்.



மு. வரதராசனார் உரை

ஒப்புரவை அறிந்து போற்றிப் பிறர்க்கு உதவியாக வாழ்கின்றவன் உயிர்வாழ்கின்றவன் ஆவான்; மற்றவன் செத்தவருள் சேர்த்துக் கருதப்படுவான்.



G.U. Pope’s Translation

Who knows what’s human life’s befitting grace,
He lives; the rest ‘mongst dead men have their place.

 – Thirukkural: 214, The Knowledge of What is Befitting a Man’s Position, Virtues



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.