இயற்றலும் ஈட்டலும் காத்தலும் – குறள்: 385

இயற்றலும் ஈட்டலும் காத்தலும்

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு.
– குறள்: 385

– அதிகாரம்: இறைமாட்சி: பொருள்



கலைஞர் உரை

முறையாக நிதி ஆதாரங்களை வகுத்து, அராசாங்கக் கருவூலத்திற்கான வருவாயைப் பெருக்கி, அதைப் பாதுகாத்துத் திட்டமிட்டுச் செலவிடுவதுதான் திறமையான நல்லாட்சிக்கு இலக்கணமாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

அரசியற்குப் பொருள் வருவாய்களை மேன்மேலமைத்தலும்; அவ்வருவாய்களின் வழி வந்த பொருள்களை ஓரிடத்துத் தொகுத்தலும்; தொகுத்தவற்றைப் பிறர் கவராமற் காத்தலும்; காத்தவற்றை அறம் பொருளின்ப வழிகளிற் செலவிடக் கூறிடுதலும்; வல்லவனே நல்லரசன்.



மு. வரதராசனார் உரை

பொருள் வரும் வழிகளை மேன்மேலும் இயற்றலும் வந்த பொருள்களைச் சேர்த்தலும், காத்தலும், காத்தவற்றை வகுத்துச் செலவு செய்தலும் வல்லவன் அரசன்.



G.U. Pope’s Translation

A king is he who treasure gains, stores up, defends,
And duly for his Kingdom’s weal expends.

Thirukkural: 385, The Greatness of a King , Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.