தலையின் இழிந்த மயிர்அனையர் – குறள்: 964

Thiruvalluvar

தலையின் இழிந்த மயிர்அனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை. – குறள்: 964

– அதிகாரம்: மானம், பால்: பொருள்.கலைஞர் உரை

மக்களின் நெஞ்சத்தில் உயர்ந்த இடம் பெற்றிருந்த ஒருவர் மானமிழந்து தாழ்ந்திடும்போது, தலையிலிருந்து உதிர்ந்த மயிருக்குச் சமமாகக் கருதப்படுவார்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

குடிப்பிறந்த மக்கள்; தம் உயர்ந்த நிலையினின்றும் ஒழுக்கக் கேட்டால் தாழ்ந்த விடத்து; தலையினின்று கழிந்த மயிரை யொப்பர்.மு. வரதராசனார் உரை

மக்கள் தம் உயர்வுக்கு உரிய நிலையிலிருந்து தாழ்ந்த போது, தலையிலிருந்து விழுந்து தாழ்வுற்ற மயிரினைப் போன்றவர் ஆவர்.G.U. Pope’s Translation

Like hairs from off the head that fall to earth,
When fall’n from high estate are men of noble birth.

Thirukkural: 964, Honour, Wealth.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.