இதனை இதனால் இவன்முடிக்கும் – குறள்: 517

இதனை இதனால் இவன்முடிக்கும்

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்து
அதனை அவன்கண் விடல்.
– குறள்: 517

– அதிகாரம்: தெரிந்து வினையாடல், பால்: பொருள்கலைஞர் உரை

ஒரு காரியத்தை ஒருவர் எப்படிச் செய்து முடிப்பார் என்பதை ஆராய்ந்து பார்த்து, அதற்குப் பிறகு அந்தக் காரியத்தை அவரிடம் ஒப்படைக்க வேண்டும்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

இவ்வினையை இக்கருவிகொண்டு இவ்வாற்றலுள்ள இவன் செய்து முடிப்பான் என்று கூறுபடுத்தி யாராய்ந்து; மூன்றும் பொருந்திய விடத்து அவ்வினையை அக்கருவியும் அவ்வாற்றலு முள்ள அவனிடம் ஒப்படைக்க.மு. வரதராசனார் உரை

இந்தத் தொழிலை இக் கருவியால் இன்னவன் முடிப்பான் என்று ஆராய்ந்த பிறகு அத் தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும்.G.U. Pope’s Translation

‘This man, this work shall thus work out,’ let thoughtful king command;
Then leave the matter wholly in his servant’s hand.

 – Thirukkural: 517, Selection and Employment, WealthBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.