வான்நோக்கி வாழும் உலகுஎல்லாம் – குறள்: 542

Thiruvalluvar

வான்நோக்கி வாழும் உலகுஎல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழும் குடி.
– குறள்: 542

– அதிகாரம்: செங்கோன்மை, பால்: பொருள்கலைஞர் உரை

உலகில் உள்ள உயிர்கள் வாழ்வதற்கு மழை தேவைப்படுவது போல
ஒரு நாட்டின் குடிமக்கள் வாழ்வதற்கு நல்லாட்சி தேவைப்படுகிறது.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

உலகத்திலுள்ள உயிர்களெல்லாம் மழையை எதிர்பார்த்து அது பெய்வதால் வாழும் ; ஆயினும் , குடிகளெல்லாரும் அரசனது செங்கோலை எதிர்பார்த்து அது நடப்பதால் வாழும் .மு. வரதராசனார் உரை

உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நோக்கி வாழ்கின்றன. அது போல் குடிகள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்.G.U. Pope’s Translation

All earth looks up to heav’n whence raindrops fall; All subjects looks to king that ruleth all.

 – Thirukkural: 542, The Right Sceptre, WealthBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.