ஆற்றின் அளவுஅறிந்து கற்க – குறள்: 725

Thiruvalluvar

ஆற்றின் அளவுஅறிந்து கற்க அவைஅஞ்சா
மாற்றம் கொடுத்தற் பொருட்டு.
– குறள்: 725

– அதிகாரம்: அவை அஞ்சாமை, பால்: பொருள்



கலைஞர் உரை

அவையில் பேசும்பொழுது குறுக்கீடுகளுக்கு அஞ்சாமல் மறுமொழி
சொல்வதற்கு ஏற்ற வகையில் இலக்கணமும், தருக்கமெனப்படும் அளவைத் திறமும் கற்றிருக்க வேண்டும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

வேற்றரசர் அவையிடத்து அவர் வினாவியதற்கு விடையும் சொன்னதற்கு மறுமொழியும் அஞ்சாது சொல்லுதற் பொருட்டு; முறைப்படி அளவை நூலைத் தெளியக் கற்க.



மு. வரதராசனார் உரை

அவையில் (ஒன்றைக் கேட்டவர்க்கு) அஞ்சாது விடை கூறும் பொருட்டாக நூல்களைக் கற்கும் நெறியில் அளவை நூல் அறிந்து கற்க வேண்டும்.



G.U. Pope’s Translation

By rule, to dialectic art your mind apply,
That in the council fearless you may make an apt reply.

 – Thirukkural: 725, Not to dread the Council, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.