அன்பிலார் எல்லாம் தமக்குரியர் – குறள்: 72

அன்பிலார் எல்லாம் தமக்குரியர்

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
குறள்: 72

– அதிகாரம்: அன்பு உடைமை, பால்: அறம்



கலைஞர் உரை

அன்பு இல்லாதவர், எல்லாம் தமக்கே என உரிமை கொண்டாடுவர்; அன்பு உடையவரோ தம் உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென எண்ணிடுவர்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

அன்பில்லாதவர் எல்லாப் பொருள்களையும் தமக்கே பயன்படுத்துவர்; அன்புடையாரோ பிறிதின் கிழமைப்பொருள்களை மட்டுமன்றித் தற்கிழமைப் பொருளாகிய தம் உடம்பையும் பிறர்க்குப் பயன்படுத்துவர்.



மு.வரதராசனார் உரை

அன்பு இல்லாதவர் எல்லாப் பொருளையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வர்; அன்பு உடையவர் தம் உடம்பையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்.



G.U. Pope’s Translation

The loveless to themselves belong alone;
The loving men are other’s to the very bone.

Thirukkural: 72, The Possession of Love, Virtues



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.