உள்ஒற்றி உள்ளூர் நகப்படுவர் – குறள்: 927

Thiruvalluvar

உள்ஒற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ஒற்றிக் கண்சாய் பவர்.
குறள்: 927

– அதிகாரம்: கள் உண்ணாமைர், பால்: பொருள்.கலைஞர் உரை

மறைந்திருந்து மதுவருந்தினாலும் மறைக்க முடியாமல் அவர்களது
கண்கள் சுழன்று மயங்குவதைக் கண்டு ஊரார் எள்ளி நகையாடத்தான் செய்வார்கள்.

.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

கள்ளை மறைந்துண்டு அதனால் வெறியேறி அறிவு தளர்பவர்; உள்ளூராரால் உள்ளத்திலுள்ள மறைபொருள்கள் உய்த்துணரப்பட்டு எப்போதும் நகையாடப்படுவர்.மு. வரதராசனார் உரை

கள்ளை மறைந்திருந்து குடித்து அறிவு மயங்குபவர், உள்ளூரில் வாழ்கின்றவரால் உள்ளான செய்திகள் ஆராயப்பட்டு எந்நாளும் சிரிக்கப்படுவர்.G.U. Pope’s Translation

Who turn aside to drink, and droop their heavy eye,
Shall be their townsmen’s jest, when they the fault espy.

Thirukkural: 927, Not Drinking Palm – Wine, Wealth.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.