ஆக்கம் கருதி முதல்இழக்கும் செய்வினை – குறள்: 463

ஆக்கம் கருதி முதல்இழக்கும் செய்வினை


ஆக்கம் கருதி முதல்இழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவு உடையார். – குறள்: 463

– அதிகாரம்: தெரிந்து செயல்வகை, பால்: பொருள்கலைஞர் உரை

பெரும் ஆதாயம் கிட்டுமென்று எதிர்பார்த்துக் கை முதலையும் இழந்து விடக்கூடிய காரியத்தை அறிவுடையவர்கள் செய்யமாட்டார்கள்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

உறுதியற்ற எதிர்கால ஊதியத்தை நோக்கி இருப்பிலுள்ள முதலையும் இழத்தற்கேதுவான முயற்சியை, அறிவுடையோர் மேற்கொள்ளார்.மு. வரதராசனார் உரை

பின் விளையும் ஊதியத்தைக் கருதி இப்போது உள்ள முதலை இழந்துவிடக் காரணமான செயலை அறிவுடையவர் மேற்கொள்ளமாட்டார்.G.U. Pope’s Translation

To risk one’s all and lose, aiming at added gain, Is rash affair, from which the wise abstain.

Thirukkural: 463, Acting after due Consideration, Wealth

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.