அறத்தான் வருவதே இன்பம் – குறள்: 39

அறத்தான் வருவதே இன்பம்


அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல. – குறள்: 39

– அதிகாரம்: அறன் வலியுறுத்தல், பால்: அறம்கலைஞர் உரை

தூய்மையான நெஞ்சுடன்  நடத்தும் அறவழி வாழ்க்கையில் வருகின்ற புகழால் ஏற்படுவதே இன்பமாகும். அதற்கு மாறான வழியில் வருவது புகழும் ஆகாது; இன்பமும் ஆகாது.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

அறவழியால் ஒருவர்க்கு வரும் இன்பமே உண்மையான இன்பமாவது; வேறு தீயவழியில் வருவனவெல்லாம் இன்பம்போல் தோன்றினும் துன்பத்தின்பாற் படுவனவே; அதோடு அவை புகழுடையனவும் ஆகா.மு. வரதராசனார் உரை

அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும்; அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை; புகழும் இல்லாதவை.Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.