சீரினும் சீர்அல்ல செய்யாரே – குறள்: 962

Thiruvalluvar

சீரினும் சீர்அல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்.
குறள்: 962

– அதிகாரம்: மானம், பால்: பொருள்.கலைஞர் உரை

புகழ்மிக்க வீர வாழ்க்கையை விரும்புகிறவர், தனக்கு எப்படியும் புகழ் வரவேண்டும் என்பதற்காக மான உணர்வுக்குப் புறம்பான காரியத்தில் ஈடுபடமாட்டார்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

புகழொடு மானத்தை நிலைநிறுத்துதலை விரும்புபவர்; புகழைச் செய்யு மிடத்தும் தம் குடிப்பிறப்பிற் கொவ்வாத இழி செயல்களைச் செய்யமாட்டார்.மு. வரதராசனார் உரை

புகழோடு பெரிய ஆண்மையும் விரும்புகின்றவர், புகழ் தேடும் வழியிலும் குடிப்பெருமைக்கு ஒவ்வாத செயல்களைச் செய்யமாட்டார்.G.U. Pope’s Translation

Who seeks with glory to combine honour’s untarnished fame,
Do no inglorious deeds, though men accord them glory’s name.

Thirukkural: 962, Honour, Wealth.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.