ஆக்கம் இழந்தேம்என்று – குறள்: 593

Self Confidence

ஆக்கம் இழந்தேம்என்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துஉடை யார்.    – குறள்: 593

                             – அதிகாரம்: ஊக்கம் உடைமை, பால்: பொருள்

கலைஞர் உரை

ஊக்கத்தை உறுதியாகக் கொண்டிருப்பவர்கள்,  ஆக்கம் இழக்க நேர்ந்தாலும் அப்போதுகூட ஊக்கத்தை இழந்து கலங்க மாட்டார்கள்.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை

 ஊக்கத்தை நிலையாகக் கைப்பொருளாகக் கொண்டவர், தம் செல்வத்தை இழந்தாராயினும் அதையிழந்தேம் என்று துன்புறார்.

மு. வரதராசனார் உரை

ஊக்கத்தை உறுதியாகத் தம்கைப் பொருளாக உடையவர், ஆக்கம் (இழந்துவிட்ட காலத்திலும்) இழந்துவிட்டோம் என்று கலங்கமாட்டார்.

G.U. Pope’s Translation

‘Lost is our wealth’, they utter not this cry distressed,
The men of firm concentred energy of soul possessed.

– Thirukkural: 593, Energy, Wealth

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.