வடகரை (சென்னை) அரசு பெண்கள் மேனிலைப் பள்ளிச் சாதனையாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி – Rewards and Recogntion for SSLC Toppers of Govt Girls Higher Secondary School Vadakarai Chennai 600052

Toppers of Govt Girls Higher Secondary School Vadakarai Chennai

(படம் – இடமிருந்து வலம்: ஆசிரியர் – திரு. எஸ். சங்கரலிங்கம் எம்.ஏ, எம்.ஃபில், பி.எட்., தலைமை ஆசிரியர் – திரு. எஸ். வெங்கட் ரவி எம்.எஸ்.சி., எம்.எட்., எம்.ஃபில், மாணவி எம். சினேகா (முதல் இடம்), எஸ். அஸ்வினி (இரண்டாம் இடம்), ஆர். கௌரி (மூன்றாம் இடம்), மற்றும் உதவித் தலைமை ஆசிரியர் – திரு. ஆர். வெங்கடேசன் எம்.ஏ, எம். எட்., எம்.ஃபில் – வடகரை (சென்னை) அரசு பெண்கள் மேனிலைப் பள்ளிச் சாதனையாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி – Rewards and Recogntion for Apr 2018 SSLC Toppers of Govt Girls Higher Secondary School Vadakarai Chennai 600052)

ஏப்ரல் 2018-ல் நடைபெற்ற பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் பள்ளி அளவில், அதிக மதிப்பெண்கள் பெற்று, முதல் மூன்று இடம்பிடித்த வடகரை (சென்னை-600052) அரசு பெண்கள் மேனிலைப் பள்ளி மாணவிகளுக்கு, மொத்த ஊக்கத்தொகையான ரூபாய் மூன்றாயிரத்தை (ரூ. 3000), 30-08-2018 அன்று, சமமாகப் பகிர்ந்து வழங்கி, சிறப்பித்தது நம் குருவிரொட்டி தமிழ் இணைய இதழ்.

ஏப்ரல் 2018-ல் பள்ளி அளவில் பத்தாம் வகுப்பில் முதல் மூன்று இடம் பிடித்து, ரூ. 1000 வீதம் ஊக்கத்தொகை பெற்ற மாணவிகள்:

  1. எம். சினேகா (முதல் இடம்) – தலைமை ஆசிரியர் திரு. எஸ். வெங்கட் ரவி அவர்களிடம் ஊக்கத்தொகை ரூ. 1000 பெறுகிறார். உடன் இருப்பவர் உதவித் தலைமை ஆசிரியர் திரு. ஆர். வெங்கடேசன்.

First Rank Holder

 

2.   எஸ். அஸ்வினி (இரண்டாம் இடம்) – உதவித் தலைமை ஆசிரியர் திரு. ஆர். வெங்கடேசன் அவர்களின் முன்னிலையில் ஊக்கத்தொகை ரூ. 1000.பெறுகிறார்.

Second Rank Holder

 

3.  ஆர். கௌரி (மூன்றாம் இடம்) – ஆசிரியர் – திரு. எஸ். சங்கரலிங்கம் அவர்களிடம் ஊக்கத்தொகை ரூ. 1000 பெறுகிறார்.

Third Rank Holder

தற்போது பதினோறாம் வகுப்பு படிக்கும் இந்த  மாணவிகள், இனி வரும் அரசுப் பொதுத் தேர்வுகளிலும் மேன்மேலும் நன்கு படித்து மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெற வாழ்த்துகிறது, குருவிரொட்டி தமிழ் இணைய இதழ். மேலும், இந்த பள்ளி மாணவிகள் அனைவரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று, அவர்கள் எண்ணிய துறையில் வல்லுனர்களாக, உயர்வடைவதற்கு, குருவிரொட்டி வாழ்த்துகிறது.

Students of XI A Govt Girls Higher Secondary School Vadakarai Chennai

(படம்: பதினோறாம் வகுப்பு மாணவிகள், அரசு பெண்கள் மேனிலைப் பள்ளி, வடகரை, சென்னை-600052)

குருவிரொட்டி, இந்த பள்ளி சாதனையாளர்களைச் சிறப்பிக்க, இத்தகைய வாய்ப்பு தந்த, ஆசிரியர் – திரு. எஸ். சங்கரலிங்கம் எம்.ஏ, எம்.ஃபில், பி.எட்., தலைமை ஆசிரியர் – திரு. எஸ். வெங்கட் ரவி எம்.எஸ்.சி., எம்.எட்., எம்.ஃபில், மற்றும் உதவித் தலைமை ஆசிரியர் – திரு. ஆர். வெங்கடேசன் எம்.ஏ, எம். எட்., எம்.ஃபில் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கிறது.

 

 

2 Comments

  1. சாதனையாளர்களுக்கும் அவர்களை பாராட்டி ஊக்குவித்த குருவிரொட்டி தமிழ் இணைய இதழுக்கும் எனது வாழ்த்துக்கள்..

    • மாணவர்களையும் குருவிரொட்டியையும் ஊக்குவிக்கும் தங்களுக்கு குருவிரொட்டி நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.