அஞ்சுவது ஓரும் அறனே; ஒருவனை
வஞ்சிப்பது ஓரும் அவா. – குறள்: 366
– அதிகாரம்: அவா அறுத்தல், பால்: அறம்
விளக்கம்:
ஒருவரை வஞ்சித்துக் கெடுப்பதற்குக் காரணமாக இருப்பது ஆசையேயாகும். எனவே, ஆசைக்கு அடிமையாகக் கூடாது என்ற அச்சத்துடன் வாழ வேண்டும்.
அஞ்சுவது ஓரும் அறனே; ஒருவனை
வஞ்சிப்பது ஓரும் அவா. – குறள்: 366
விளக்கம்:
ஒருவரை வஞ்சித்துக் கெடுப்பதற்குக் காரணமாக இருப்பது ஆசையேயாகும். எனவே, ஆசைக்கு அடிமையாகக் கூடாது என்ற அச்சத்துடன் வாழ வேண்டும்.
விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்வாய்சோரா வன்க ணவன். – குறள்: 689 – அதிகாரம்: தூது, பால்: பொருள் கலைஞர் உரை ஓர் அரசின் கருத்தை மற்றோர் அரசுக்கு எடுத்துரைக்கும் தூதன்,வாய்தவறிக்கூட, குற்றம் தோய்ந்த சொற்களைக் கூறிடாத உறுதிபடைத்தவனாக இருத்தல் வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தன் [ மேலும் படிக்க …]
அறன்அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறன்அறிந்து தேர்ந்து கொளல். – குறள்: 441 – அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல், பால்: பொருள் விளக்கம்: அறம் உணர்ந்த மூதறிஞர்களின் நட்பைப் பெறும் வகைஅறிந்து, அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
உற்றநோய் நீக்கி உறாஅமை முன்காக்கும்பெற்றியார்ப் பேணிக் கொளல். – குறள்: 442 – அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல், பால்: பொருள் கலைஞர் உரை வந்துள்ள துன்பத்தைப் போக்கி, மேலும் துன்பம் நேராமல் காக்கவல்ல பெரியோர்களைத் துணையாகக் கொள்ள வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தெய்வத்தால் அல்லது மக்களால் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment