நெடும்புனலுள் வெல்லும் முதலை – குறள்: 495

Thiruvalluvar

நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற.
– குறள்: 495

அதிகாரம்: இடன் அறிதல், பால்: பொருள்



கலைஞர் உரை

தண்ணீரில் இருக்கும் வரையில்தான் முதலைக்குப் பலம்; தண்ணீரைவிட்டு வெளியே வந்து விட்டால் ஒரு சாதாரண உயிர்கூட அதனை விரட்டி விடும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

முதலை தன் வாழிடமாகிய ஆழநீர் நிலையுள் யானையுட்படப் பிறவுயிரிகளை , யெல்லாம் வென்று விடும் ; அந்நீர் நிலையினின்று நீங்கின் அதனின் வலிகுன்றிய உயிரிகளும் அதனை வென்றுவிடும் .



மு. வரதராசனார் உரை

ஆழமுள்ள நீரில் முதலை மற்ற உயிர்களை வெல்லும்; ஆனால் நீரிலிருந்து நீங்கி வந்தால் அந்த முதலையையும் மற்ற உயிர்கள் வென்று விடும்.



G.U. Pope’s Translation

The crocodile prevails in its own flow of water wide, If this it leaves, ’tis slain by anything beside.

 – Thirukkural: 495, Knowing the Place, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.