சென்ற இடத்தால் செலவிடா தீதுஒரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு. – குறள்: 422
– அதிகாரம்: அறிவு உடைமை, பால்: பொருள்
விளக்கம்:
மனம் போகும் வழியெல்லாம் போக விடாமல் தீய வழிகளைத் தள்ளிவிட்டு, நல்வழியைத் தேர்வு செய்வதே அறிவுடைமையாகும்.
சென்ற இடத்தால் செலவிடா தீதுஒரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு. – குறள்: 422
விளக்கம்:
மனம் போகும் வழியெல்லாம் போக விடாமல் தீய வழிகளைத் தள்ளிவிட்டு, நல்வழியைத் தேர்வு செய்வதே அறிவுடைமையாகும்.
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்துசொல்லாட சோர்வு படும். – குறள்: 405 – அதிகாரம்: கல்லாமை, பால்: பொருள் கலைஞர் உரை கல்வியறிவில்லாதவர்கள் தங்களைப் பெரிய மேதைகளைப் போல் காட்டிக் கொள்ளும் போலி வேடம், கற்றுத் தேர்ந்த அறிஞர்களிடம் அவர்கள் உரையாடும்போது கலைந்து போய்விடும். ஞா. தேவநேயப்பாவாணர் உரை [ மேலும் படிக்க …]
தேவர் அனையர் கயவர் அவரும்தாம்மேவன செய்துஒழுக லான். – குறள்: 1073 – அதிகாரம்: கயமை, பால்: பொருள் கலைஞர் உரை புராணங்களில் வரும் தேவர்களைப் போல் மனம்விரும்பியதையெல்லாம் செய்யக்கூடியவர்கள் கயவர்கள் என்பதால், இருவரையும் சமமாகக் கருதலாம். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கயவர் தேவரை யொத்தவர்; அவரும் [ மேலும் படிக்க …]
எனைப்பகை உற்றாரும் உய்வர் வினைப்பகை வீயாது பின்சென்று அடும். -குறள்: 207 – அதிகாரம்: தீவினை அச்சம், பால்: அறம் கலைஞர் உரை ஒருவர் நேரடியான பகைக்குத் தப்பி வாழ முடியும்; ஆனால், அவர்செய்யும் தீய வினைகள் பெரும் பகையாகி அவரைத் தொடர்ந்துவருத்திக்கொண்டே இருக்கும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment