இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல். – குறள்: 316
– அதிகாரம்: இன்னா செய்யாமை, பால்: அறம்
விளக்கம்: ஒருவன் துன்பமானவை என்று தன் வாழ்க்கையில் கண்டு உணர்ந்தவைகளை, மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.
இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல். – குறள்: 316
விளக்கம்: ஒருவன் துன்பமானவை என்று தன் வாழ்க்கையில் கண்டு உணர்ந்தவைகளை, மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.
இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யாமன்னவன் கோற்கீழ்ப் படின். – குறள்: 558 – அதிகாரம்: கொடுங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை வறுமையின்றி வாழ்ந்தால்கூட அந்த வாழ்க்கை கொடுங்கோல்ஆட்சியின் கீழ் அமைந்துவிட்டால் வறுமைத் துன்பத்தை விட அதிகத் துன்பம் தரக்கூடியது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை முறை (நீதி [ மேலும் படிக்க …]
பெண்ஏவல் செய்துஒழுகும் ஆண்மையின் நாணுடைப்பெண்ணே பெருமை உடைத்து. – குறள்: 907 – அதிகாரம்: பெண்வழிச் சேறல், பால்: பொருள். கலைஞர் உரை ஒரு பெண்ணின் காலைச் சுற்றிக் கொண்டு கிடக்கும் ஒருவனின்ஆண்மையைக் காட்டிலும், மான உணர்வுள்ள ஒருத்தியின் பெண்மையே பெருமைக்குரிய தாகும். . ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]
பொருள்என்னும் பொய்யா விளக்கம் இருள்அறுக்கும்எண்ணிய தேயத்துச் சென்று. – குறள்: 753 – அதிகாரம்: பொருள் செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை பொருள் என்னும் அணையா விளக்கு மட்டும் கையில் இருந்துவிட்டால் நினைத்த இடத்துக்குச் சென்று இருள் என்னும் துன்பத்தைத் துரத்தி விட முடிகிறது. ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark


Be the first to comment