Thiruvalluvar
திருக்குறள்

கடைக் கொட்கச் செய்தக்கது ஆண்மை – குறள்: 663

கடைக் கொட்கச் செய்தக்கது ஆண்மை இடைக்கொட்கின்எற்றா விழுமம் தரும். – குறள்: 663 – அதிகாரம்: வினைத்திட்பம், பால்: பொருள் கலைஞர் உரை செய்து முடிக்கும் வரையில் ஒரு செயலைப்பற்றி வெளிப்படுத்தாமலிருப்பதே செயலாற்றும் உறுதி எனப்படும். இடையில் வெளியே தெரிந்துவிட்டால் அச்செயலை நிறைவேற்ற முடியாத அளவுக்கு இடையூறு ஏற்படக்கூடும். [ மேலும் படிக்க …]

வீறுஎய்தி மாண்டார் வினைத்திட்பம்
திருக்குறள்

வீறுஎய்தி மாண்டார் வினைத்திட்பம் – குறள்: 665

வீறுஎய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்ஊறுஎய்தி உள்ளப் படும். – குறள்: 665 – அதிகாரம்: வினைத்திட்பம், பால்: பொருள் கலைஞர் உரை செயல் திறனால் சிறப்புற்ற மாண்புடையவரின் வினைத்திட்பமானது, ஆட்சியாளரையும் கவர்ந்து பெரிதும் மதித்துப் போற்றப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை சூழ்வினையால் மேம்பட்டுப் பிறவிலக்கணங்களாலும் மாட்சிமைப் பட்ட [ மேலும் படிக்க …]

திருக்குறள்

ஊறுஒரால் உற்றபின் ஒல்காமை – குறள்: 662

ஊறுஒரால் உற்றபின் ஒல்காமை இவ்இரண்டின் ஆறுஎன்பர் ஆய்ந்தவர் கோள். – குறள்: 662 – அதிகாரம்: வினைத்திட்பம், பால்: பொருள் கலைஞர் உரை இடையூறு வருவதற்கு முன்பே அதனை நீக்கிட முனைவது, மீறி வந்துவிடுமேயானால் மனம் தளராது இருப்பது ஆகிய இரண்டு வழிகளுமே அறிவுடையோர் கொள்கையாம். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் – குறள்: 670

எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்வேண்டாரை வேண்டாது உலகு. – குறள்: 670 – அதிகாரம்: வினைத்திட்பம், பால்: பொருள் கலைஞர் உரை எவ்வளவுதான் வலிமையுடையவராக இருப்பினும் அவர் மேற்கொள்ளும் செயலில் உறுதியில்லாதவராக இருந்தால், அவரை உலகம் மதிக்காது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை வினை செய்வதில் உறுதியை விரும்பாத [ மேலும் படிக்க …]

உருவுகண்டு எள்ளாமை
திருக்குறள்

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் – குறள்: 667

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்குஅச்சுஆணி அன்னார் உடைத்து. – குறள்: 667 – அதிகாரம்: வினைத்திட்பம், பால்: பொருள் கலைஞர் உரை உருவத்தால் சிறியவர்கள் என்பதற்காக யாரையும் கேலி செய்து அலட்சியப்படுத்தக் கூடாது. பெரிய தேர் ஓடுவதற்குக் காரணமான அச்சாணி உருவத்தால் சிறியதுதான் என்பதை உணர வேண்டும். ஞா. [ மேலும் படிக்க …]

திருக்குறள்

துன்பம் உறவரினும் செய்க – குறள்: 669

துன்பம் உறவரினும் செய்க துணிவுஆற்றிஇன்பம் பயக்கும் வினை. – குறள்: 669 – அதிகாரம்: வினைத்திட்பம், பால்: பொருள் கலைஞர் உரை இன்பம் தரக்கூடிய செயல் என்பது, துன்பம் வந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் துணிவுடன் நிறைவேற்றி முடிக்கக் கூடியதேயாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை வினைசெய்யுங்கால் தமக்குத் துன்பம் [ மேலும் படிக்க …]

கலங்காது கண்ட வினைக்கண்
திருக்குறள்

கலங்காது கண்ட வினைக்கண் – குறள்: 668

கலங்காது கண்ட வினைக்கண் துளங்காதுதூக்கம் கடிந்து செயல். – குறள்: 668 – அதிகாரம்: வினைத்திட்பம், பால்: பொருள் கலைஞர் உரை மனக்குழப்பமின்றித் தெளிவாக முடிவு செய்யப்பட்ட ஒரு செயலைத் தளர்ச்சியும், தாமதமும் இடையே ஏற்படாமல் விரைந்து நிறைவேற்ற வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தெளிவாக எண்ணித்துணிந்த [ மேலும் படிக்க …]

Determination
திருக்குறள்

எண்ணிய எண்ணியாங்கு எய்துப – குறள்: 666

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்திண்ணியர் ஆகப் பெறின். – குறள் – 666 – அதிகாரம்: வினைத்திட்பம் , பால்: பொருள் விளக்கம்: எண்ணியதைச்  செயல்படுத்துவதில்  உறுதி உடையவர்களாக இருந்தால் அவர்கள் எண்ணியவாறே வெற்றி பெறுவார்கள்.

Determination
திருக்குறள்

வினைத்திட்பம் என்பது ஒருவன்  – குறள்: 661

வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற.          – குறள்: 661         அதிகாரம்: வினைத்திட்பம், பால்: பொருள் விளக்கம்:  மற்றவை எல்லாம் இருந்தும் ஒருவரது மனத்தில் உறுதி மட்டும் இல்லாவிட்டால், அவரது செயலிலும் உறுதி இருக்காது.

Cube
திருக்குறள்

சொல்லுதல் யார்க்கும் எளிய – குறள்: 664

சொல்லுதல் யார்க்கும் எளிய; அரியஆம் சொல்லிய வண்ணம் செயல்.           – குறள்: 664               – அதிகாரம்: வினைத்திட்பம், பால்: பொருள் விளக்கம்: ‘இச்செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம்’ என்று சொல்லுதல் எவர்க்கும் எளிது; சொல்லியபடி [ மேலும் படிக்க …]