வினைக்கண் வினைகெடல் ஓம்பல் – குறள்: 612

Thiruvalluvar

வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.
– குறள்: 612

– அதிகாரம்: ஆள்வினை உடைமை, பால்: பொருள்



கலைஞர் உரை

எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அதனை முழுமையாகச் செய்து முடிக்க வேண்டும். இல்லையேல் அரைக்கிணறு தாண்டிய கதையாகி விடும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

இன்றியமையாத வினையைச் செய்யாது விட்டவரை உலகம் போற்றாது விட்டது; ஆதலால், எடுத்துக் கொண்ட நன்முயற்சியில் தொடர்ந்து வினை செய்யாதிருத்தலை ஒழிக.



மு. வரதராசனார் உரை

தொழிலாகிய குறையைச் செய்யாமல் கைவிட்டவரை உலகம் கைவிடும்; ஆகையால் தொழிலில் முயற்சி இல்லாதிருத்தலை ஒழிக்க வேண்டும்.



G.U. Pope’s Translation

In action be thou’ ware of act’s defeat;
The world leaves those who work leave incomplete!

 – Thirukkural: 612, Manly Effort, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.