வேட்பன சொல்லி வினைஇல எஞ்ஞான்றும் – குறள்: 697

Thiruvalluvar

வேட்பன சொல்லி வினைஇல எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல்.
– குறள்: 697

– அதிகாரம்: மன்னரைச் சேர்ந்தொழுகல், பால்: பொருள்கலைஞர் உரை

விரும்பிக் கேட்டாலும் கூட, பயனுள்ளவற்றை மட்டுமே சொல்லிப்
பயனற்றவைகளைச் சொல்லாமல் விட்டுவிட வேண்டும்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

பெரும்பயன் படுவனவும் அரசன் விரும்புவனவுமான செய்திகளை அவன் கேட்டிலனாயினும் சொல்லி; எப்போதும் வினைக்குதவாத வீண் செய்திகளை அவன் கேட்பினும் சொல்லாது விடுக.மு. வரதராசனார் உரை

அரசர் விரும்புகின்றவற்றை மட்டும் சொல்லிப் பயனில்லாதவற்றை அவரே கேட்டபோதிலும் எப்போதும் சொல்லாமல் விட வேண்டும்.G.U. Pope’s Translation

Speak pleasant things, but never utter idle word; Not though by monarch’s ears with pleasure heard.

 – Thirukkural: 697 , Conduct in Persence of the King, WealthBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.