சூழ்ச்சி முடிவு துணிவுஎய்தல் -குறள்: 671

Thiruvalluvar

சூழ்ச்சி முடிவு துணிவுஎய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது.
– குறள்: 671

– அதிகாரம்: வினை செயல்வகை, பால்: பொருள்கலைஞர் உரை

ஒரு செயலில் ஈடுபட முடிவெடுக்கும்போது அச்செயலால் விளையும் சாதக பாதகங்கள் பற்றிய ஆராய்ச்சியும் முடிவடைந்திருக்க வேண்டும். முடிவெடுத்த பிறகு காலந்தாழ்த்துவது தீதாக முடியும்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒன்றைப்பற்றி ஆராய்ந் தெண்ணுவதன் இறுதியாவது, இதை இன்னவாறு செய்ய வேண்டும் என்னும் தீர்மானத்தைக் கொள்ளுதலே; அத்தீர்மானத்தை உடனே நிறைவேற்றாது காலங்கடத்துவது குற்றமாகும்.மு. வரதராசனார் உரை

ஆராய்ந்து எண்ணுவதற்கு எல்லை துணிவு கொள்வதே ஆகும். அவ்வாறு கொண்ட துணிவு காலந் தாழ்த்து நிற்பது குற்றமாகும்.G.U. Pope’s Translation

Resolve is counsel’s end. If resolutions halt
In weak delays, still unfulfilled, ’tis grievous fault.

 – Thirukkural: 671, The Method of Acting, WealthBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.