கரப்புஇலா நெஞ்சின் கடன்அறிவார்- குறள்: 1053

Thiruvalluvar

கரப்புஇலா நெஞ்சின் கடன்அறிவார் முன்நின்று
இரப்பும்ஓர் ஏஎர் உடைத்து. – குறள்: 1053

– அதிகாரம்: இரவு, பால்: பொருள்கலைஞர் உரை

உள்ளதை ஒளிக்காத உள்ளமும், கடமையுணர்வும் கொண்டவரிடத்தில்தனது வறுமை காரணமாக இரந்து கேட்பதும் பெருமை யுடையதே யாகும்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

கரத்த லில்லா நெஞ்சினையுடைய கடமையறிவார் முன்நின்று அவரிடத்து இரத்தலும்; இரப்போர்க்கு ஓர் அழகுடையதாம்.மு. வரதராசனார் உரை

ஒளிப்பு இல்லாத நெஞ்சும் கடமையுணர்ச்சியும் உள்ளவரின் முன்னே நின்று இரந்து பொருள் கேட்பதும் ஓர் அழகு உடையதாகும்.G.U. Pope’s Translation

The men who nought deny, but know what’s due , before their face To stand as suppliants affords especial grace.

 – Thirukkural: 1053, Mendicancy, WealthBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.