தாளாண்மை யில்லாதான் வேளாண்மை – குறள்: 614

Thiruvalluvar

தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்.
– குறள்: 614

– அதிகாரம்: ஆள்வினை உடைமை, பால்: பொருள்



கலைஞர் உரை

ஊக்கமில்லாதவர் உதவியாளராக இருப்பதற்கும், ஒரு பேடி, கையிலே வாள்தூக்கி வீசுவதற்கும் வேறுபாடு ஒன்றுமில்லை.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

விடாமுயற்சியில்லாதவன் எல்லார்க்கும் நன்றிசெய்தலை மேற்கொள்ளுதல் ; போருக்கு அஞ்சும்பேடி போர்க்களத்தில் தன் கையிலுள்ளவாளைப் பயன்படுத்துதல் போல் இல்செயலாம்.



மு. வரதராசனார் உரை

முயற்சி இல்லாதவன் உதவி செய்பவனாக இருத்தல், பேடி தன் கையால் வாளை எடுத்து ஆளும் தன்மைபோல் நிறைவேறாமல் போகும்.



G.U. Pope’s Translation

Beneficent intent in men by whom no strenuous work is wrought,
Like battle-axe in sexless being’s hand availeth nought.

 – Thirukkural: 614, Manly Effort, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.