குடிதழீஇக் கோல்ஓச்சும் மாநில – குறள்: 544

Thiruvalluvar

குடிதழீஇக் கோல்ஓச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு.
– குறள்: 544

– அதிகாரம்: செங்கோன்மை, பால்: பொருள்கலைஞர் உரை

குடிமக்களை அரவணைத்து ஆட்சி நடத்தும் நல்லரசின் அடிச்சுவட்டை நானிலமே போற்றி நிற்கும்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தன் குடிகளை அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்தும் பெருநில வேந்தனுடைய அடிகளை ; நாடு முழுதும் விடாது பற்றி நிற்கும்.மு. வரதராசனார் உரை

குடிகளை அன்போடு அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்துகின்ற அரசனுடைய அடியைப் பொருந்தி உலகம் நிலைபெறும்.G.U. Pope’s Translation

Whose heart embraces subjects all, lord over mighty land
Who rules, the world his feet embracing stands.

 – Thirukkural: 544, The Right Sceptre, WealthBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.