சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல் – குறள்: 524

சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல்

சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல் செல்வம்தான்
பெற்றத்தால் பெற்ற பயன். – குறள்: 524

– அதிகாரம்: சுற்றம் தழால், பால்: பொருள்கலைஞர் உரை

தன் இனத்தார், அன்புடன் தன்னைச் சூழ்ந்து நிற்க வாழும்
வாழ்க்கையே ஒருவன் பெற்ற செல்வத்தினால் கிடைத்திடும் பயனாகும்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒருவன் செல்வம் பெற்றதனாற் பெற்ற பயனாவது ; தன் உறவினத்தால் தான் சூழப்படும் வகை அதைத் தழுவி யொழுகுதலாம்.மு. வரதராசனார் உரை

சுற்றத்தாரால் சுற்றப்படும்படியாக அவர்களைத் தழுவி அன்பாக வாழ்தல் ஒருவன் செல்வத்தைப் பெற்றதனால் பெற்ற பயனாகும்.G.U. Pope’s Translation

The profit gained by wealth’s increase,
Is living compassed round by relatives in peace.

 – Thirukkural: 524, Cherishing one’s kindred, WealthBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.