நவில்தொறும் நூல்நயம் போலும் – குறள்: 783

நவில்தொறும் நூல்நயம்

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்பு உடையாளர் தொடர்பு. – குறள்: 783

அதிகாரம்: நட்பு, பால்: பொருள்கலைஞர் உரை

படிக்க படிக்க  இன்பம்  தரும்  நூலின் சிறப்பைப் போல் பழகப் பழக
இன்பம் தரக்கூடியது பண்புடையாளர்களின் நட்பு.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

பண்பட்ட மேலோர் தம்முட் செய்யும் நட்பு, சிறந்த நூல் கற்கக்கற்கக் கற்றார்க்கு இன்பந்தருவதுபோல் இன்பஞ் செய்வதாம்.மு. வரதராசனார் உரை

பழகப் பழக நற்பண்பு உடையவரின் நட்பு இன்பம் தருதல், நூலின் நற்பொருள் கற்கக் கற்க மேன்மேலும் இன்பம் தருதலைப் போன்றதாகும்.G.U. Pope’s Translation

Learned scroll the more you ponder,
Sweeter grows the mental food;
So the heart by use grows fonder,
Bound in friendship with the good.

Thirukkural: 783, Friendship, Wealth

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.