பகல்வெல்லும் கூகையைக் காக்கை – குறள்: 481

Thiruvalluvar

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.
– குறள்: 481

அதிகாரம்: காலம் அறிதல், பால்: பொருள்கலைஞர் உரை

பகல் நேரமாக இருந்தால் கோட்டானைக் காக்கை வென்று விடும். எனவே எதிரியை வீழ்த்துவதற்கு ஏற்ற காலத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

காகம் தன்னினும் வலிய கோட்டானை அதற்குக் கண்தெரியாத பகல் வேளையில் வென்று விடும் ; அது போலப் பகைவரைப் போரில் வெல்லக்கருதும் அரசர்க்கும் அதற்கேற்ற காலம் வேண்டும் .மு. வரதராசனார் உரை

காக்கை தன்னைவிட வலிய கோட்டானைப் பகலில் வென்றுவிடும்; அதுபோல் பகையை வெல்லக் கருதும் அரசர்க்கும் அதற்கு ஏற்ற காலம் வேண்டும்G.U. Pope’s Translation

A crow will conquer owl in broad daylight;
The king that foes would crush needs fitting time to fight

 – Thirukkural: 481, Knowing the fitting time, WealthBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.