துறந்தார் பெருமை துணைக்கூறின் – குறள்: 22

Thiruvalluvar

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
– குறள்: 22

– அதிகாரம்: நீத்தார் பெருமை, பால்: அறம்கலைஞர் உரை

உலகில் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கூற முடியுமா? அதுபோலத்தான் உண்மையாகவே பற்றுகளைத் துறந்த உத்தமர்களின் பெருமையையும் அளவிடவே முடியாது.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

துறந்தார் பெருமை துணைக்கூறின் – இருவகைப்பற்றையும் முற்றும் விட்டுவிட்ட முனிவரது பெருமையை இவ்வளவினதென்று அளவிட்டுக் கூறப்புகின்; வையத்து இறந்தாரை எண்ணிக்கொண்டு அற்று – அது இவ்வுலகத்தில் இதுவரை பிறந்திறந்தவரையெல்லாம் இத்தனையர் என எண்ணியறியப் புகுந்தாற் போல்வதாம்.மு. வரதராசனார் உரை

பற்றுகளைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில் இதுவரையில் பிறந்து இறந்தவர்களை எண்ணிக் கணக்கிடுவதைப் போன்றது.G.U. Pope’s Translation

As counting those that from the earth have passed away,
‘Tis vain attempt the might of holy men to say.

 – Thirukkural: 22, The Greatness of Ascetics, VirtuesBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.