முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே – குறள்: 640

Thiruvalluvar

முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
திறப்பாடு இலாஅ தவர்.
– குறள்: 640

– அதிகாரம்: அமைச்சு, பால்: பொருள்



கலைஞர் உரை

முறைப்படித் தீட்டப்படும் திட்டங்கள்கூடச் செயல் திறன் இல்லாதவர்களிடம் சிக்கினால் முழுமையாகாமல் முடங்கித்தான் கிடக்கும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

வினையைச் செய்து முடிக்கும் திறமையில்லாதவர்; செய்யவேண்டிய வினைகளை ஒழுங்குபட எண்ணிவைத்தும் ; செய்யுங்கால் முற்றுப் பெறாதனவாகவே விடுவர்.



மு. வரதராசனார் உரை

(செயல்களை முடிக்கும்) திறன் இல்லாதவர், முன்னே முறையாக எண்ணி வைத்திருந்தும் (செய்யும்போது) குறையானவைகளையே செய்வர்.



G.U. Pope’s Translation

For gain of end desired just counsel nought avails To minister, when tact in execution fails.

 – Thirukkural: 640, The Officeof Minister of State, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.