புணர்ச்சி பழகுதல் வேண்டா – குறள்: 785

Thiruvalluvar

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பு ஆம் கிழமை தரும் – குறள்: 785

– அதிகாரம்: நட்பு, பால்: பொருட்பால்கலைஞர் உரை

இருவருக்கிடையே நட்புரிமை முகிழ்ப்பதற்கு ஏற்கனவே தொடர்பும் பழக்கமும் வேண்டுமென்பதில்லை. இருவரின்ஒத்த மன உணர்வே போதுமானது.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒருவரோடொருவர் நட்புச்செய்தற்கு ஒரிடத்திற் கூடுதலும் பலகாற் கண்டும் பேசியும் உறவாடுதலும் வேண்டியதில்லை; இருவர்க்கும் ஒத்த வுணர்ச்சியே நண்பராதற் குரிய உரிமையைத்தரும்.மு. வரதராசனார் உரை

நட்புச் செய்வதற்குத் தொடர்பும் பழக்கமும் வேண்டியதில்லை; ஒத்த உணர்ச்சியே நட்பு ஏற்படுவதற்கு வேண்டிய உரிமையைக் கொடுக்கும்.G.U. Pope’s Translation

Not association constant, not affection’s token bind; ‘Tis the unison of feeling friends unites of kindred mind.

 – Thirukkural: 785, Friendship, WealthBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.