முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் – குறள்: 492

Thiruvalluvar

முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்துஆம்
ஆக்கம் பலவும் தரும்.
குறள்: 492

அதிகாரம்: இடன் அறிதல், பால்: பொருள்கலைஞர் உரை

வரும்பகையை எதிர்க்கும் வலிமை இருப்பினும், அத்துடன் அரணைச் சார்ந்து போரிடும் வாய்ப்பும் இணையுமானால் பெரும்பயன் கிட்டும்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

மாறுபாட்டோடு கூடிய வலிமையோர்க்கும் ; அரணைச் சேர்ந்ததனாலுண்டாகும் மேம்பாடு பல நலங்களையும் தரும் .மு. வரதராசனார் உரை

மாறுபாடு பொருந்திய வலிமை உடையவர்க்கும் அரணோடு பொருந்தி ஏற்படுகின்ற வெற்றியானது பலவகைப் பயன்களையும் கொடுக்கும்.G.U. Pope’s Translation

Though skill in war combine with courage tried on battle – field,
The added gain of fort doth great advantage yeild.

 – Thirukkural: 492, Knowing the Place, WealthBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.