அழிவினவை நீக்கி ஆறுய்த்து- குறள்: 787

Thiruvalluvar

அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு. – குறள்: 787

– அதிகாரம்: நட்பு, பால்: பொருட்பால்கலைஞர் உரை

நண்பனைத் தீயவழி சென்று கெட்டுவிடாமல் தடுத்து, அவனை
நல்வழியில் நடக்கச் செய்து, அவனுக்குத் தீங்கு வருங்காலத்தில் அந்தத்தீங்கின் துன்பத்தைப் பகிர்ந்து கொள்வதே உண்மையான நட்பாகும்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

நண்பன் கேடுதரும் தீயவழிகளில் ஒழுகுங்கால் அவற்றினின்று விலக்கி; நல்வழிகளில் ஒழுகாக்கால் அவற்றிற் செலுத்தி; தெய்வத்தாற் கேடு வந்தவிடத்து அதை நீக்க முடியாமையின், அத்துன்பத்தைத் தானும் உடன் நுகர்ந்து வருந்துவதே; ஒருவனுக்கு நட்பாவது.மு. வரதராசனார் உரை

அழிவைத் தரும் தீமைகளிலிருந்து நீக்கி, நல்ல வழியில் நடக்கச் செய்து, அழிவு வந்த காலத்தில் உடனிருந்து துன்பப்படுவதே நட்பாகும்.G.U. Pope’s Translation

Friendship from ruin saves, in way of virtue keeps; In troublous time, it weeps with him who weeps.

 – Thirukkural: 787, Friendship, WealthBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.