மருவுக மாசுஅற்றார் கேண்மைஒன் . – குறள்: 800

Thiruvalluvar

மருவுக மாசுஅற்றார் கேண்மைஒன் றுஈத்தும்
ஒருவுக ஒப்புஇலார் நட்பு.
– குறள்: 800

– அதிகாரம்: நட்பு ஆராய்தல், பால்: பொருட்பால்



கலைஞர் உரை

மனத்தில் மாசு இல்லாதவர்களையே நண்பர்களாகப் பெற வேண்டும். மாசு உள்ளவர்களின் நட்பை, விலைகொடுத்தாவது விலக்கிடவேண்டும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

மேற்கூறிய குற்றமொன்றும் இல்லாதவருடைய நட்பையே பயிலுக; அறியாமை கரணியமாக உள்ளத்தால் பொருந்தாதவரொடு செய்துகொண்ட நட்பை அவர் விரும்பிய தொன்றைக் கொடுத்தாயினும் விட்டுவிடுக.



மு. வரதராசனார் உரை

குற்றமற்றவருடைய நட்பைக் கொள்ளவேண்டும்; ஒத்த பண்பு இல்லாதவருடைய நட்பை ஒன்றைக் கொடுத்தாவது கைவிடவேண்டும்.



G.U. Pope’s Translation

Cling to the friendship of the spotless ones;whate’er you pay,
Renounce alliance with the men of evil way.

 – Thirukkural: 800, Investigation formatting Friendships, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.