மனைவிழைவார் மாண்பயன் எய்தார் – குறள்: 901

Thiruvalluvar

மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்
வேண்டாப் பொருளும் அது.
குறள்: 901

– அதிகாரம்: பெண்வழிச் சேறல், பால்: பொருள்.கலைஞர் உரை

கடமையுடன் கூடிய செயல்புரியக் கிளம்பியவர்கள் இல்லற சுகத்தைப் பெரிதெனக் கருதினால் சிறப்பான புகழைப் பெற மாட்டார்கள்.

.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

இன்பம் பற்றி மனைவியை அளவறிந்து காதலித்து அவள் விருப்பப்படி நடப்பவர் சிறந்த பயன் தரும் அறத்தினைச் செய்யார்; இனி இன்பத்திற்கும் அறத்திற்குமேதுவான பொருளீட்டுதலை விரும்பி மேற்கொள்வார்,அதற்குத் தடையென்று கருதி விரும்பாத செய்தியும் மனைவிக்கு அடிமையாக்கும் அப்பெண்ணின்பப் பித்தமே.மு. வரதராசனார் உரை

மனைவியை விரும்பி அவள் சொன்னபடி நடப்பவர் சிறந்த பயனை அடையமாட்டார்; கடமையைச் செய்தலை விரும்புகின்றவர் வேண்டாத பொருளும் அதுவே.G.U. Pope’s Translation

Who give their soul to love of wife acquire not nobler gain:
Who give their soul to strenuous deeds such meaner joys disdain.

Thirukkural: 901, Being led by Women, Wealth.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.