பொய்படும் ஒன்றோ புனைபூணும் – குறள்: 836

Thiruvalluvar

பொய்படும் ஒன்றோ புனைபூணும் கைஅறியாப்
பேதை வினைமேற் கொளின்.
– குறள்: 836

.

– அதிகாரம்: பேதைமை, பால்: பொருள்



கலைஞர் உரை

நேர்மை வழி அறியாத மூடர், மேற்கொண்ட செயலைத் தொடர
முடியாமல், அதனால் அச்செயலும் கெட்டுத் தம்மையும் தண்டித்துக்
கொள்வர்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

செய்யும் வகை யறியாத பேதை ஒரு கருமத்தை யேற்றுச் செய்யின்; அதிற் புரைவிழுதல் மட்டுமோ. அவன் குற்றப்பட்டு விலங்கு பூணுதலும் நிகழும்.



மு. வரதராசனார் உரை

ஒழுக்கநெறி அறியாத பேதை ஒரு செயலை மேற் கொண்டால் (அந்தச் செயல் முடிவுபெறாமல்) பொய்படும்; அன்றியும் அவன் குற்றவாளியாகித் தளை பூணுவான்.



G.U. Pope’s Translation

When fool some task attempts with uninstructed pains,
It fails; nor that alone, himself he binds with chains.

Thirukkural: 836, Folly, Wealth

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.