பெருமை உடையவர் ஆற்றுவார் – குறள்: 975

Achiever

பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல்.      –  குறள்: 975

                 – அதிகாரம்:  பெருமை, பால்: பொருள்


கலைஞர் உரை

அரிய  செயல்களை  அவற்றுக்கு  உரிய  முறையான  வழியில் செய்து
முடிக்கும் திறமையுடையவர்கள் பெருமைக்குரியவராவார்கள்.


ஞா. தேவநேயப் பாவாணர் உரை

பெருமை உடையவர்- பெருமைக் கேதுவான பண்பை இயற்கையாக வுடையவர், அருமை உடைய செயல் ஆற்றின் ஆற்றுவார் – பிறராற் செயற்கரிய நற்செயல்களை நெறிப்படி செய்து முடிப்பர்.


மு. வரதராசனார் உரை

பெருமைப்பண்பு உடையவர் செய்வதற்கு அருமையான செயலைச் செய்வதற்கு உரிய நெறியில் செய்து முடிக்க வல்லவர் ஆவர்.


G.U. Pope’s Translation

The man endowed with greatness true,
Rare deeds in perfect wise will do.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.