மனத்து உளதுபோலக் காட்டி – குறள்: 454

Thiruvalluvar

மனத்து உளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துஉளது ஆகும் அறிவு.
– குறள்: 454

அதிகாரம்: சிற்றினம் சேராமை, பால்: பொருள்கலைஞர் உரை

ஒருவரின் அறிவு அவரது மனத்தின் இயல்பு என்பது போல்
தோன்றினாலும், அது அவர் சேர்ந்த கூட்டத்தாரின் தொடர்பால்
வெளிப்படுவதேயாகும்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

மேற்கூறிய சிறப்பறிவு; ஒருவனுக்கு அவன் மனத்தின் கண்ணேயுள தாவதுபோல் தன்னைத் தோற்றுவித்து; உண்மையில் அவன் சேர்ந்த இனத்தின் கண்ணே உண்டாவதாம்.மு. வரதராசனார் உரை

ஒருவனுக்குச் சிறப்பறிவு மனத்தில் உள்ளது போலக்காட்டி (உண்மையாக நோக்கும் போது) அவன் சேர்ந்த இனத்தில் உள்ளதாகும்.G.U. Pope’s Translation

Man’s wisdom seems the offspring of his mind; ‘Tis outcome of companionship we find.

 – Thirukkural: 454, Avoiding mean Associations, WealthBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.