நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை – குறள்: 802

Thiruvalluvar

நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை மற்றுஅதற்கு
உப்புஆதல் சான்றோர் கடன்.
– குறள்: 802

– அதிகாரம்: பழைமை, பால்: பொருள்



கலைஞர் உரை

பழைமையான நண்பர்களின் உரிமையைப் பாராட்டுகிற
சான்றோர்க்குரிய கடமைதான் உண்மையான நட்புக்கு அடையாளமாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

நட்பிற்கு உறுப்பாவது விரும்பியன செய்தற்குரிய உரிமை, அதனால் அவ்வுரிமைக்குச் சுவையூட்டுவதுபோல் துணையாதல் அறிவுடையோர் கடமையாம்.



மு. வரதராசனார் உரை

நட்பிற்கு உறுப்பாவது நண்பருடைய உரிமைச் செயலாகும்; அந்த உரிமைச் செயலுக்கு உடன்பட்டவராதல் சான்றோரின் கடமையாகும்.



G.U. Pope’s Translation

Familiar freedom friendship’s very frame supplies; To be its savour sweet is duty of the wise.

Thirukkural: 802, Familiarity, Wealth

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.