நெஞ்சின் துறவார் துறந்தார்போல் – குறள்: 276

Thiruvalluvar

நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல். – குறள்: 276

– அதிகாரம்: கூடா ஒழுக்கம், பால்: அறம்



கலைஞர் உரை

உண்மையிலேயே மனதாரப் பற்றுகளைத் துறக்காமல், துறந்தவரைப் போல் வாழ்கின்ற வஞ்சகர்களைவிட இரக்கமற்றவர் யாருமில்லை.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

உள்ளத்திற் பற்றாது பற்றற்றவர்போல் நடித்துப் பிறரை யேமாற்றி வாழும் பொய்த் துறவியரைப்போல; கொடியவர் இவ்வுலகத்தில் இல்லை.



மு. வரதராசனார் உரை

மனத்தில் பற்றுக்களைத் துறக்காமல், துறந்தவரைப் போல் வஞ்சனை செய்து வாழ்கின்றவர் போல் இரக்கமற்றவர் வேறு எவரும் இல்லை.



G.U. Pope’s Translation

In mind renouncing nought, in speech renouncing every tie, Who guileful live, -no men are found than these of ‘harder eye.’

 – Thirukkural: 276, Inconsistent Conduct, Virtues



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.